நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தில் ரஜினியின் போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டது. இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது ஷ. இதனால், உடனடியாக மும்பை சென்ற ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படமும் 2023ம் ஆண்டு இறுதிக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு படங்களுக்குமே ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், அடுத்ததாக தலைவர் 170 படமும் ஹைப்பை ஏற்றியுள்ளது. ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் - சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. லைகா தயாரிக்கும் தலைவர் 170 படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாம். இதனால் தற்போது ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாகவுள்ளது.
அதேபோல், ரஜினியுடன் நடிக்கும் நடிகர்கள், டெக்னீஷியன்கள் யார் யார் என்பதையும் தசெ ஞானவேல் முடிவு செய்து வருகிறாராம். தலைவர் 170 படத்தில் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதற்காக விக்ரம்க்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க லைகா ரெடியாகவுள்ளது.
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வரும் விக்ரம், சில தினங்களுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறு விபத்தால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ரெஸ்ட் எடுத்து வருகிறார். இதனால் தலைவர் 170 படத்தில் விக்ரம் நடிக்க முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக இன்னொரு ஹீரோவை வில்லன் கேரக்டருக்கு புக் செய்ய படக்குழு ரெடியாகிவிட்டது.
அது ஆக்ஷன் கிங் அர்ஜுனாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நேர்மையான போலீஸ் ஆபிஸராக மட்டுமே நடித்து வந்த அர்ஜுன், அஜித்தின் மங்காத்தா படத்தில் முதன்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதனால், தலைவர் 170 படத்தில் அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்கலாம் என ஞானவேல் & டீம் ஆலோசித்து வருகிறது. விக்ரமின் பதிலை பொறுத்தே அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்த ஞானவேல் முடிவு செய்துள்ளாராம். முன்னதாக தலைவர் 170 படத்திற்காக விக்ரமுக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க லைகா ரெடியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!