• Sep 21 2024

அமெரிக்காவில் அசத்தும் வசூல் வேட்டை… முதல் ஐந்து திரைப்படங்களுக்குள் இடம் பிடித்த விக்ரம் திரைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 3-ஆம் திகதி வெளியாகி மாஸ் ஹிட் கொடுக்கும் திரைப்படம்தான் விக்ரம். இப்படம், உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக ரிலீசானது. கைதி, மாஸ்டர் போன்ற போன்ற ஹிட் படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாகிய நாளில் தமிழகத்தில் மட்டும் 800 க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும்,உலகமெங்கும் 5000 க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், வெளியாகியுள்ளது, அதன்படி இப்படம் ரிலீஸ் ஆனா முதல் நாளில் உலகம் முழுவதும் 35 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாம்.

இந்நிலையில் முதல் வாரக் கடைசியை கடந்துள்ள நிலையில் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் வார இறுதியில் முதல் 5 படங்களுக்கு விக்ரம் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.இது சம்மந்தமான பட விநியோக நிறுவனமான ப்ரைம் மீடியா பிலிம்ஸ் இதுவரை விக்ரம் திரைப்படம் 15 லடசம் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.இது இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய்க்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement