• Sep 20 2024

விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய கடைசி விவசாயி; எத்தனையாவது இடம் தெரியுமா?

tech / 2 years ago

Advertisement

Listen News!

உலகளாவிய ரீதியில் காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட திரைப்படங்கள் பல மொழிகளிலும் வெளியாகிய வண்ணமே உள்ளன. இதில் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 6000 இற்கும் அதிகமான படங்கள் வெளியாகி இருக்கின்றன. இவற்றுள் அறிமுக நடிகர்களின் திரைப்படங்கள், சிறு பட்ஜெட் அடிப்படையிலான திரைப்படங்கள் என அனைத்தும் உள்ளடங்கும்.

இவ்வாறு வெளியாகும் படங்கள் அனைத்தும் வசூல், விமர்சன ரீதியாக ஆண்டுதோறும் பட்டியலிடப்பட்டு வருகின்றன. சமீப காலமாக தமிழ்த் திரைப்படங்கள் ஹிந்தி திரைப்படங்களை முறியடித்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றுள் ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் ஆகியோரின் படங்களும் உண்டு.

அந்த வகையில் 2022-ஆம் ஆண்டின் அரையாண்டைக் கடந்து விட்ட இந்த ஆண்டில் வெளியான ஒரு சில தமிழ் படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றி அடைந்திருக்கின்றன. இதில் குறிப்பாக சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை ஈட்டியிருக்கின்றது.

இந்தநிலையில் ஆண்டுதோறும் வெளியாகும் உலகத் திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் Letterboxd என்ற இணையத்தளமானது 2022-ஆம் ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த திரைப்படங்களை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படம் ஆனது உலகளவில் 2-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

அதேபோன்று கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த 'விக்ரம்' படம் ஆனது 11-ஆம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இவ்வாறாக உலகளாவிய ரீதியில் தமிழ் திரைப்படங்களிற்கு கிடைத்திருக்கும் வரவேற்புப் பற்றியே தற்போது இணையத்தில் பலரும் தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement