பொன்னியின் செல்வன் படத்தை முடித்த கையோடு ஆரம்பிக்கப்பட்ட படம்தான் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இத் திரைப்படமானது விக்ரமுக்கு ஒரு கட்டாய ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் இந்தப் படம் இப்போது இருக்கிறது.
மல்டி ஸ்டாரர் படமாக வெளியான பொன்னியின் செல்வன் படம் சொல்ல முடியாத அளவுக்கு வெற்றி நடை போட்டது . அதற்குமுன்பு வரை வெளியான ஒரு சில படங்கள் விக்ரமுக்கு எந்த வெற்றியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அதனால் இந்த தங்கலான் திரைப்படம் ஒரு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவும் பா.ரஞ்சித் படம் என்பதால் அவர் சொல்லவரும் அரசியல் என்ன என்பதும் அனைவருக்கும் தெரியும். அதற்கேற்ற வகையில் விக்ரமும் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். மேலும் இந்தப் படம் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பிற பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறதாம்.
முதல் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஒரு பகுதியில் நடந்ததாம். பிரிட்டிஷுக்கு முற்பட்ட காலத்தில் நடக்கும் நிகழ்வு என்பதால் அதற்கேற்ற வகையில் இருக்கும் ஊர் பகுதிகளை தேடி அலைந்திருக்கிறார் ரஞ்சித். எந்தவொரு தொலை தொடர்பும்இல்லாததால் எல்லாருமே லைவ்வாகவே வசனம் பேசி நடித்திருக்கிறார்களாம்.
பழங்கால இசைக் கலைஞர்களை நேரடியாகவே வரவழைத்து இசையமைக்க சொல்லி படமாக்கியதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பேக் ரவுண்ட் இசையும் லைவ்வாகவே தான் நடந்ததாம். ஒவ்வொரு சீனுக்கும் தேவையான இசையை நேரடியாகவே இசையமைத்துதான் படமாக்கியிருக்கிறார்களாம்.
இந்த மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளிவராயிருக்கிறது. ரசிகர்களும் அந்த தருணத்திற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.
Listen News!