தமிழ் திரையுலகை பொருத்தவரை தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக தங்களுடைய உடலை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று வருத்தி நடிக்கும் வெகு சில நடிகர்களின் பட்டியல் முக்கியமானவர் சீயான் விக்ரம்.
தற்பொழுது இவருடைய நடிப்பில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது மாபெரும் பொருட்செலவில் பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.நடிகர் விக்ரம் இந்த திரைப்படத்திற்காக தன்னை பல விதத்தில் வருத்திக்கொண்டு நடித்து முடித்திருக்கிறார்.
இந்த நிலையில், விக்ரம் அடுத்ததாக செம மாஸ் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளார். தற்போதைய தமிழ் சினிமாவின் சென்சேஷன் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜின் துணை இயக்குநர் மகேஷ் பாலசுப்பிரமணியம் என்பவருடன் கைகோர்க்க உள்ளாராம் விக்ரம்.
இப்படத்தை லலித் குமார் தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது. லலித் தற்போது லியோ படத்தை தயாரித்து வருகிறார். ஏற்கனவே விக்ரம் நடித்த கோப்ரா படத்தையும் அவர் தான் தயாரித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!