• Sep 20 2024

35 கிலோ உடல் எடையை குறைத்த விக்ரம்! வெளியாகியுள்ள புகைப்படங்கள்,வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்திற்கு வித்தியாசமான,சுவாரிசயமான முயற்சிகளை எடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம். 1990ல் வெளியான என் காதல் கண்மணி திரைப்படத்தில்தான் விக்ரம் அறிமுகம் என்றாலும், ஸ்ரீதர் இயக்கிய தந்துவிட்டேன் என்னை திரைப்படம்தான் இவரை கவனிக்க வைத்தது. 

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மகான், பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா ஆகிய படங்கள் வெளிவந்தன.இதில் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியை இவருக்கு தேடி தந்தது. 


இதனையடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் தங்களான் ஆகிய இரு திரைப்படங்களும் வெளிவரவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் ஐ. இப்படத்திற்காக விக்ரம் தனது உடலை வருத்திக்கொண்டு நடித்திருப்பார்.இதில் தனது நடிப்பினை மிக சிறப்பாகவும் வேற லெவலில் கொடுத்திருப்பார்.

இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் விக்ரம் 35 கிலோ வரை உடல் எடையை குறைத்தாராம். இதற்காக அவர் உடலளவிலும், மனதளவிலும் பல கஷ்டங்களை அனுபவித்ததாக இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படம் இன்றுடன்  வெளிவந்து 8 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி புகைப்படங்கள்,வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement