தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குப் பிறகு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டு விளங்கும் நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்பொழுது முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தளபதி 67 படத்தில் பணிபுரியும் பிரபல இயக்குநர் & வசனகர்த்தா ரத்ன குமார், தனது டுவிட்டர் பக்கத்தின் பயோவில் தளபதி 67 படத்தின் வசனகர்த்தாவாக பணிபுரிய உள்ளதை அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அவரது டுவிட்டர் பயோவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.ரத்னகுமார் ஏற்கனவே மேயாத மான், ஆடை, குளுகுளு ஆகிய படங்களை இயக்கியவர். விக்ரம், மாஸ்டர் படங்களில் வசனகர்த்தாவாக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!