• Sep 21 2024

இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்ததா விக்ரம் படம்- கொண்டாடும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் தான் விக்ரம்.

தீவிர கமலின் ரசிகரான லோகேஷ் அவரின் குருநாதராக கமலை வைத்து ஒரு சம்பவம் செய்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு விக்ரம் திரைப்படம் பயங்கர மாஸாக எடுத்துள்ளார் லோகேஷ்.

சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் அவர்களின் கதாபாத்திரங்களில் ரசிகர்கள் மனதை வென்றுள்ளனர்.

அத்தோடு இறுதியில் நடித்த சூர்யாவின் காட்சி பேசுபொருளாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அனைவரையும் கவர்ந்துள்ள விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று மட்டுமே இப்படம் விக்ரம் திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் விக்ரம் திரைப்படம் ரூ.65 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறதாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement