• Sep 21 2024

3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா விக்ரம் படம்.. வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமலின் விக்ரம் படம் சில நாட்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்துள்ள இப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை ரசிகர்களிடத்தே இருந்து பெற்று வருகின்றது. மாஸ்டர் படத்தில் விட்டதையும் சேர்த்து லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் பிடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

விக்ரம் படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக உள்ளது. கதாப்பாத்திரங்கள் தேர்வு, ஸ்க்ரீன் ப்ளே, டிவிஸ்ட்டுகள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜின் ஆதிக்கமே உள்ளது. படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அத்தோடு படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் செதுக்கியுள்ளார் லோகேஷ் என சமூக வலைதளங்களில் பாராட்டு மழை குவிந்து வருகின்றது.

இந்நிலையில் விக்ரம் படம் தமிழகத்தில் ரூ 65 கோடி வரை முதல் 3 நாட்களிலேயே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

எனினும் இதன் மூலம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த கே.ஜி.எப் 2 படத்தின் வசூலை இன்னும் சில நாட்களில் முந்திவிடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதோடு பாகுபலி 2 தமிழக வசூலான 150 கோடியை விக்ரம் தாண்டும் என்றே கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement