• Sep 21 2024

உலகம் முழுவதும் கலக்கும் விக்ரம் திரைப்படம்…சந்தோஷத்தில் ஆண்டவர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 வெளியான திரைப்படம் விக்ரம். 13 நாட்கள் கடந்த நிலையில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகின்றது.

உலகநாயகன் நடிப்பில் 4 ஆண்டுகளின் பின்பு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் எதிர்பார்ப்பை தாண்டி வசூலில் குவித்து வருகின்றது. இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி முதலான ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது .

இந்நிலையில் 13 நாட்கள் கடந்த நிலையில் விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலித்துள்ளது. இதற்கு ஷேர் மட்டும் 75 கோடி ரூபா வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவுஸ்ரேலியா வசூல் நிலவரம் பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் கசிந்த வருகின்றது. அந்தவகையில் அவுஸ்திரேலியாவில் மூன்று வாரங்களில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது விக்ரம் திரைப்படம்.
இதன் பெறுமதி இந்திய மதிப்பில் சுமார் 53 கோடி ரூபாய் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement