லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா கவனிக்கப்படும் ஒரு இயக்குநராக மாறிவிட்டார். மாநகரம், கைதி, மாஸ்டர், இப்போது விக்ரம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கி வருகிறார்.
மேலும் இந்த 4 படங்களும் எப்போதும் போல இரண்டு சண்டை, காதல், நடனம் என இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டும் இயக்கி வருகின்றார்.
இப்போது அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்த 3ஆம் திகதி ரிலீஸ் ஆகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சினிமா வட்டாரங்களில் விக்ரம் பட வசூலை கண்டு ஆச்சரியத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.
அத்தோடு உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை எட்டிவிட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியை எப்போது வசூலிக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
தற்போது அந்த நாளும் வந்துவிட்டது, ஆமாம் தமிழகத்தில் மட்டுமே படம் நேற்றைய வசூல் நிலவரப்படி ரூ. 100 கோடியை எட்டிவிட்டது.
முதல் வார முடிவிலேயே படம் ரூ. 100 கோடியை தாண்டியது சாதனை விஷயமாக கூறப்படுகின்றது.
பிற செய்திகள்:
- காதலர் விக்னேஷ்சிவனை கரம்பிடித்தார் நயன்தாரா-இனிதே நிறைவு பெற்ற திருமணம்..!
- குட்டை கவுனில் ரசிகர்களை சொக்க வைத்த ஷெரின்-வைரலாகும் வீடியோ..!
- நயன்தாரா திருமணத்திற்கு சமந்தா செல்லமாட்டாரா…வெளியானது காரணம்..!
- லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!
- சாய் பல்லவியின் கார்க்கி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…வெளியானது தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!