• Sep 20 2024

களை கட்டப் போகும் விக்ரம் பிரபு-ஸ்ரீ திவ்யா நடிக்கும் புதிய படம்…ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் மட்டுமன்றி உதவி தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடித்த 'கும்கி' என்ற படம் திரை உலகில் இவரை படம் பிடித்துக் காட்டியது. இப்படத்திற்காகவே இவர் யானைகள் வளர்ப்பக்கத்திற்குச் சென்று யானைகளுடன் பழகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து 'இவன் வேற மாதிரி', 'சிகரம் தொடு' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இவ்வாறாக தனக்குரிய படங்களைத் தானே தேர்ந்தெடுத்து நடித்து வந்த விக்ரம் பிரபு தற்போது முன்னணி இயக்குநரான முத்தையா இயக்கத்தில் 'ரெய்டு' என்ற படத்தில் நடித்து வருகின்றார். அப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருக்கின்றார். ஏற்கனவே இவர்கள் இருவரினதும் நடிப்பில் வெளியாகி இருந்த 'வெள்ளைக்கார துரை' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது. இந்த நிலையில் அந்தப் போஸ்டரில் உள்ள விக்ரம் பிரபுவின் ரத்தம் வடியும் அட்டாகாசமான தோற்றத்திற்கு ரசிகர்கள் பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் ஸ்ரீ திவ்யாவுடன் இணைந்து புதுமுக நடிகை அனந்திகாவும் நடிக்கவிருப்பதால் மேலும் எதிர்பார்ப்புக்கள் கிளம்பிய வண்ணமே இருக்கின்றன. ஏற்கெனவே விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா நடிச்ச படம் இன்னமும் நம்ம மனசை விட்டுப் போகல. இதில வேற இந்தப் படத்திலயும் இவங்க இரண்டு பெரும் தான் ஜோடி என்பதால கண்டிப்பாக இந்தப் படமும் ஓஹோ என்று களை கட்டத்தான் போகுது..!

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement