சன் டிவியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருக்கின்றன. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
அதில் விக்கி "அஞ்சலியை இந்த நிலைமையில் விட்டிட்டு என்னால வர முடியல, அங்கயே இருக்கலாம் என்று பார்த்தால் அந்த வேதநாயகம் இருக்க விட மாட்டேங்கிறாரு" என மனதிற்குள் நினைத்துப் புலம்புகின்றார்.
மறுபுறம் வேதநாயகம் வீட்டில் டார்ச் லைட்டுடன் காவல் இருந்தவாறு "விக்கி வந்தாலும் நாங்க விட மாட்டோம்" எனக் கூறுகின்றார்.
வேதநாயகத்தை மீறி எப்படி அந்த வீட்டிற்குள் போகலாம் என ஜோசித்த விக்கி பெண் வேடமணிந்து யாருக்கும் தெரியாமல் உள்ளே போகின்றார். வீட்டிற்குள் சத்தம் கேட்டதும் பாட்டியும் அஞ்சலியும் வந்து யார் என்று எட்டிப் பார்க்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.
Listen News!