இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா.படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.
இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகியது.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வை தொகுத்து வழங்கிய விஜே அஞ்சனாவுக்காக விக்ரம் ஹேப்பி பர்த்டே பாடியுள்ளார்.
இதனால் விஜே அஞ்சனா மேடையிலேயே நெகிழ்ந்து போய்விட்டார்.இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள விஜே அஞ்சனா, “இன்று பணிநாள்.கோப்ரா ட்ரெய்லர் விழாவை தொகுத்து வழங்கினேன். பொதுவாக நான் என் பிறந்த நாளில் இப்படி பணிபுரிந்ததில்லை.ஆனால் என் பிறந்த நாளின் இன்றைய நாளில் நான் பணி செய்வது சிறப்பான நாளாகவே இருந்தது. உங்கள் அன்புக்கு நன்றி விக்ரம் சார். தவிர, என் பிறந்த நாளுக்கு வாழ்த்தி அனைவரும் ஹேப்பி பர்த்டே பாடுவது மிகவும் அற்புதமான உண்ர்வு, நீங்கள் என் நாளை சிறப்பாக்கியுள்ளீர்கள். இதுபோதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Listen News!