தமிழ் சினிமாவில் சீயான் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விக்ரம். என்னதான் விக்ரம் சேது படத்திற்க்கு முன்பே நடிக்க வந்தாலும் அவருக்கு பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் தான் அடையாளத்தை கொடுத்தது. தன் ஒட்டுமொத்த நடிப்பையும் அப்படத்தில் கொட்டி தான் யார் என நிரூபித்து காட்டினார் விக்ரம்.
பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து தேர்வு செய்து, The Man Company, Wow & பல பிராண்டுகளின் அனைத்து அத்தியாவசிய அழகு மற்றும் ஒப்பனை தயாரிப்புகளையும் சேமித்து வைக்கவும்.
அதன் பின் திரைத்துறையில் அவர் திரும்பிப்பார்க்கவில்லை. எனினும் தொடர்ந்து கமர்ஷியலாகவும், வித்யாசமான படங்களிலும் நடித்து வெற்றிகளை குவித்து முன்னணி நாயகனாக உயர்ந்தார் விக்ரம். ஆனால் சமீபகாலமான அவரது படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.
மேலும் அவரின் நடிப்பு படத்தில் சிற்பாக அமைந்தாலும் வலுவான திரைக்கதை மற்றும் கதை இல்லாத காரணத்தால் தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன.எனினும் சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான கோப்ரா திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இம்மாதம் விக்ரம் நடிப்பில் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ளது.மேலும் இப்படம் தன்னை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என விக்ரம் நம்பியுள்ளார். எனினும் இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
அத்தோடு சீயான் 61 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படம் பீரியட் படமாக உருவாவதாகவும், 3d தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாகவும் பல தகவல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ott நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு வாங்க முன்வந்து இருக்கின்றதாம்.
என்னதான் விக்ரமின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. அத்தோடு ரஞ்சித்தின் படம் என்பதால் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்க போட்டி நிலவுவதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!