• Sep 21 2024

விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதையில் நடிக்கும் விக்ரம்…யார் இயக்கம் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகர் விக்ரம். ஆரம்பகாலகட்டத்தில் பல போராட்டங்களை சந்தித்து இன்று முக்கிய நடச்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றார் விக்ரம். டப்பிங் கலைஞராக இருந்து பின்னர் நடிகராக உயர்ந்து இன்று தன் கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக உருவெடுத்துள்ளார் விக்ரம்.

சேது படத்தின் மூலம் திருப்புமுனையை கண்ட விக்ரம் தொடர்ந்து தில், தூள், சாமி, அந்நியன், தெய்வத்திருமகள், ஐ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அத்தோடு கடைசியாக இவரும் இவர் மகன் துருவும் நடித்த மகான் திரைப்படம் OTT யில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகின்றார் விக்ரம். எனினும் இந்நிலையில் கடந்தாண்டு விக்ரம் மற்றும் இயக்குநர் ரஞ்சித் இணையவுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இளையராஜா இசையமைக்க இருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில் இப்படத்தைப்பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது இயக்குநர் ரஞ்சித் நடிகர் விஜய்க்காக ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு கதை உருவாக்கியிருந்தாராம். மேலும் அந்த கதையை விக்ரமிடம் சொல்ல அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அந்த கதை தான் தற்போது சீயான் 61 திரைப்படமாக உருவாகவுள்ளதாக ரஞ்சித் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/htqI7txMkB8

Advertisement

Advertisement