பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது நாளுக்கு நாள் களை கட்டிய வண்ணமே இருக்கின்றது. இதில் இருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வெளியேறிவிட்டனர். இவர்களை தொடர்ந்து இந்த வாரம் குயின்ஷி எவிக்ஷன் ஆகலாம் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எஞ்சிய போட்டியாளர்களில் அசீம், விக்ரமன், தனலட்சுமி, ஷிவின், மணிகண்டன், அமுதவாணன், ஏடிகே ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யமாக விளையாடி வருகின்றனர். இவர்களில் விக்ரமன் எப்போதும் நீதி, நேர்மை, நியாயம் என அறிவுரை பேசி வருகிறார்.
அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் முதல் அநீதியை தட்டிக் கேட்கும் ஒருவராக விக்ரமன் செயல்பட்டு வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசி வரும் விக்ரமன், பெரும்பாலும் அசீம் உடன் மோதி வருவதை வழக்கமாக கொண்டுள்ளமையை பார்க்க முடிகிறது.
அதாவது அசீமும் சக போட்டியாளர்களை டிரிக்கர் செய்து விளையாடுவதால், அவருக்கும் விக்ரமனுக்கும் எப்போதுமே அடிக்கடி சண்டை நடக்கிறது. அதேநேரம், மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்லும் விக்ரமன், தன்னைப் பற்றி யாரேனும் விமர்சித்தால் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. எந்த அடிப்படையில் என்னைப் பற்றி அப்படி சொன்னீங்கன்னு அவர்களிடம் விவாதம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது எப்போதுமே நேர்மையாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் பேசும் விக்ரமன், அவர் மீதான விமர்சனத்தை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை என ஹவுஸ்மேட்ஸ் பலரும் நினைக்கின்றனர். ஷிவின் இந்த விமர்சனத்தை நேரடியாகவே விக்ரமனிடம் சொல்ல, அதற்கு அவர் பயங்கர டென்ஷன் ஆகிவிட்டார்.
அதேபோல், ஏடிகே, ராம் இருவரும் கூறுகையில் விக்ரமன் பாயிண்ட் பிடித்து பேசினாலும் ரொம்ப செல்ஃபிஷாக விளையாடுகிறார் என தனியாக பேசிக் கொள்கின்றனர். அதேபோல், நேற்றைய தினம் நடந்த பூட்டு போடும் டாஸ்க்கில், விக்ரமன் அரசியல் செய்வதாக ஆயிஷா நேரிடையாகவே கூறிவிட்டார். இதனால், விக்ரமனும் சற்று டென்ஷன் ஆகி அங்கிருந்து கோபத்துடன் சென்றார்.
அத்தோடு அமுதவாணனை அசீம் அடித்துவிட்டதாக விக்ரமன் குற்றம்சாட்டிய நிலையில், நேற்று ஷிவினும் தனலட்சுமியும் கடுமையாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.
ஆனால், விக்ரமன் அப்போது எதுவும் பேசாமல் சற்று அமைதியாக தான் இருந்தார். இதனைத் தொடர்ந்து அசீம் என்றால் மட்டும் அவருக்கு கோபம் வந்துவிடுகிறது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும் அசீமை விக்ரமன் அட்டக்கத்தி என சொன்னதும் கூட தனிநபர் தாக்குதல் என்பது மாதிரியாக நெட்டிசன்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதனால், ட்விட்டரில் பூமர் விக்ரமன் என்ற ஹேஷ்டேக் பயங்கர டிரெண்டாகி வருகிறது.
விக்ரமன் நேர்மையாகவே இருந்தாலும் அவருக்கு எதிரான இந்த பூமர் விக்ரமன் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் நெட்டிசன்களிடம் அசீம்க்கு தான் அதிகம் சப்போர்ட் இருப்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.
Listen News!