பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அரண்மனை டாஸ்க்கில் நடைபெற்ற சாவி திருட்டு சம்பவம் தொடர்பாக அசீம் மீது தான் வழக்கு போடுவதாக ADK குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தன்மீது போடப்பட்டுள்ள வழக்கை தான் ஏற்பதாகவும், இதுகுறித்த கோர்ட் விசாரணைக்கு ஒத்துழைக்க இருப்பதாகவும் அசீம் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், அசீமை விக்ரமன் விசாரிக்கிறார். ராம் இந்த வழக்கில் நீதிபதியாக செயல்படுகிறார். அசீம் தனது வழக்கறிஞராக ஷிவின் செயல்படுவார் என கேமரா முன்னலையில் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து, நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. அப்போது, அசீம் கேள்விக்கு சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேளுங்க என விக்ரமிடம் கூறினார். இது தவிர வீட்டில டாஸ்கட இல்லாமல் படுத்து உறங்கிறதும் ஒரு கேஸ் தான் என ராமை சார்ந்தும் பேசியுள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!