பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக தொடங்கி கடந்த ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்தது.முந்தைய சீசன்களைப் போல இந்த பிக்பாஸ் சீசனும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பும் முதல் வாரத்தில் இருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது.
அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் ஃபினாலேவுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். பிக் பாஸ் Finale ஆட்டம், பாட்டம் என அமர்க்களமாக செல்ல இதன் இறுதியில் வெற்றியாளர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன்படி அசிம் 6 ஆவது பிக்பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் அறிவிக்கப்பட, இரண்டாவது இடத்தை விக்ரமன் பிடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை ஷிவின் பிடித்திருந்தார்.இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள விக்ரமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என விக்ரமனை பலரும் குறிப்பிட்டு எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அவர் இரண்டாவது இடம் பிடித்திருந்தாலும் மக்கள் ஆதரவு பல மடங்கு அவருக்கு அதிகரித்துள்ளது.
இதனிடையே, தற்போது வீடியோவில் பேசி உள்ள விக்ரமன், "வணக்கம். உங்க எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கணும். நீங்க எவ்வளவு சப்போர்ட் என் மேல காமிச்சீங்க அப்படின்னு வீட்டுக்குள்ள இருந்து வெளியே வந்ததுக்கு அப்புறம் தான் என்னால உணர முடிஞ்சது. என் மேல் அவ்ளோ அன்பும், ஆதரவும் ரொம்ப ஆர்கானிக்கா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் காமிச்சு இருக்கீங்க. அதற்கு ஒரு மிகப்பெரிய நன்றி. ஒரு சின்ன உதாரணம் சொல்லணும்னா பொங்கல் அன்னைக்கி தாய்மார்கள் அவங்க வீட்டு வாசலில் போட்ட கோலத்தில் "அறம் வெல்லும்" அப்படிங்குறதையும் சேர்த்து போட்டு இருக்கீங்க.
இதைவிட பெரிய வெற்றி நீங்க எனக்கு என்ன குடுத்துற முடியும். நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். உங்க அன்புக்கு நான் மிகப்பெரிய நன்றியை தெரிவிச்சுக்க கடமைப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் உங்களோட மனநிலை என்ன என்பதை நான் உணர்றேன். இது வந்து வெறும் நன்றி சொல்றதுக்காக மட்டும் போடப்பட்ட வீடியோ இல்ல. உங்களை எல்லாரையும் சந்திக்கலாம்ன்னு ஆசைப்படுறேன். அந்த மீட்டிங் நடக்கப் போகுது. அது எப்போன்னு நான் Official-ஆ அறிவிக்கிறேன். மறுபடியும் சொல்றேன் அன்புக்கும், ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அறம் வெல்லும்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!