• Sep 20 2024

நடிகை லைலாவிடம் விக்ரம் கட்டிய 20 நிமிட சவால்- கடைசில இப்பிடி ஆயிடுச்சே- கலாய்த்து வரும் ரசிகர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதில் முக்கியமானவர் தான் நடிகர் விக்ரம். இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் தங்கலான் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளால். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பித்திருக்கின்றனர். கோலார் தங்க வயலில் தமிழர்கள் பட்ட இன்னல்களை பற்றி படம் பேசுகிறது. இதன் மேக்கிங் வீடியோவை பார்த்தபோது கண்டிப்பாக விக்ரமுக்கு இந்தப் படம் பெரிய பெயரை பெற்றுக்கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது.


 மேலும் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் திட்டத்திலும் படக்குழு இருக்கிறது. இப்படி விக்ரம் பரபரப்பாக தங்கலானை நோக்கி காத்திருக்கிறார். விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் எந்த அளவு ரசிப்பார்களோ அதே அளவு அவரது கேரக்டரையும் ரசிப்பார்கள். எந்த ஈகோவும் இல்லாமல் எப்போதும் கலகலவென இருக்கும் விக்ரம் லைலாவிடம் ஒரு சவால் விட்டது தெரியவந்திருக்கிறது.

அதாவது பிதாமகனில் நடித்துக்கொண்டிருந்தபோது அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் லைலா எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தாராம். அதனை பார்த்த விக்ரம் லைலாவிடம் சென்று ஒரு 20 நிமிடங்கள் சிரிக்காமல் இருங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டாராம். அதற்கு லைலாவும் ஒத்துக்கொண்டாராம். விக்ரம் கையில் டைமரோடு லைலாவுக்கு எதிரே நின்று டைமரை ஆன் செய்திருக்கிறார். 


ஆனால் லைலாவால் சில நொடிகள்கூட சிரிக்காமல் இருக்க முடியவில்லையாம். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் லைலா என்றாலே சிரிப்புதான். அவரால் எப்படி சிரிக்காமல் இருக்க முடியும் என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Advertisement

Advertisement