• Sep 20 2024

உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் 3 வது இடத்தைப் பிடித்த விக்ரம் திரைப்படம்- இத்தனை மில்லியன் வசூலா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் சூர்யா ஹெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் இவரது கதாப்பாத்திரம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

கடந்த 3ம் திகதி அனைத்து உலகத் திரையரங்குகளிலும் மிகப் பிரமாண்டமாக வெளியாகிய இத்திரைப்படம் சக்கைபோடு போட்டு வருகிறது

சில ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு கமலின் திரைப்படம் வெளியாக, அதனை அவரின் தீவிர ரசிகர் லோகேஷ் இயக்க ஒரு fanboy சம்பவமாக பார்க்கப்படுகிறது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தவிர மற்ற இடங்களிலும் பெரிய வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது உலகளவிலான பாக்ஸ் ஆபீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது, அதில் விக்ரம் திரைப்படம் வார இறுதியில் $ 21 மில்லியன் வசூல் செய்து 3-வது அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது.

அப்படத்தை தொடர்ந்து Doctor Strange, The Bad Guys உள்ளிட்ட திரைப்படங்கள் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement