கோப்ரா படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வருவதோடு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜாவும், நீலம் புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.
கோலார் தங்க வயலைக் கதைக்களப் பின்னணியாகக் கொண்டு, ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகன் பசுபதி, ஹரி கிருஷ்ணன் அன்பு துரை உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் மற்றும் படக்குழு உற்சாகமாக ஓடும் நீரில் எடுத்துக்கொண்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது அதில், சியான் விக்ரம் தங்கலான் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே கோலார் தங்க வயலில் தமிழ் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
KGF தமிழர்கள் மத்தியில் சீயான் விக்ரம் @Chiyaan #Thangalaan 💥💥#ChiyaanVikram #தங்கலான் pic.twitter.com/ltt1hkUjZL
Listen News!