அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், மிர்னாளினி, ஸ்ரீநிதி ஷெட்டி என பலர் நடிக்க நேற்று ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான திரைப்படம் கோப்ரா.
விக்ரம் படம் என்றாலே அதில் ஏதாவது ஸ்பெஷல் இருக்கும்.ஆனால் படம் கொஞ்சம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இப்படத்தில் நடிகர் விக்ரம் 7 விதமான கெட் அப்களில் நடித்து மாஸ் காட்டி உள்ளார்.மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். மேலும் இதுதவிர நடிகைகள் மிருணாளினி, மீனாட்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். அத்தோடு இப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
இந்நிலையில் இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் படம் கடும் விமர்சனங்களை தாண்டி எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!