சினிமா நடிகர், நடிகைகளை பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் தங்களது சம்பளத்தை அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றார்கள். அந்த வரிசையில் தற்போது விக்ரமும் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கின்றார்.
விக்ரம் 'மகான்' படத்திற்கு 14கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். தங்கலான் படத்திற்கு 22கோடி சம்பளம் வாங்கியிருக்கார். ஆனால் இந்த 2படத்திற்கும் இடையில் இவருக்கு எந்த ஒரு வெற்றியும் பெரிதளவில் கிடைக்கவில்லை.
ஆனால் இவர் தற்போது நடிக்கிற புதுப் படங்களுக்கு 30கோடி சம்பளம் வாங்குகின்றார். இப்படி சம்பளத்தை தாறுமாறாக உயர்த்துவது தான் விக்ரமனின் ஸ்டைல் என்றும் கூறப்படுகின்றது. மேலும் தங்கலான் சில இடங்களில் வெற்றி பெற்றதனுடைய effect தான் இது என்றும் கூறப்படுகின்றது.
மேலும் இயக்குநர்கள் அறிமுக நடிகர்களையோ அல்லது வளர்ந்து வரும் நடிகர்களையோ வைத்து படம் எடுக்க விரும்புவதில்லை. அதனால் அதிகமாக முன்னணி நடிகர்களையே வைத்து படம் எடுக்கிறார்கள். இதையே நல்ல காரணமாக வைத்து விக்ரம் போன்ற ஒரு சிலர் தங்களது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் விக்ரம் தற்போது 30கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது என்ற தகவல் ஆனது ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்க செய்துள்ளது.
Listen News!