• Sep 20 2024

வெளியானது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தின் 2-ஆவது சிங்கிள்... வாவ் பாடல் ரொம்ப சூப்பரா இருக்கே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விக்ரம் நடிப்பில் தற்போது 'துருவ நட்சத்திரம்' படம் தயாராகி உள்ளது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக நடிகை ரீத்துவர்மா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


'துருவ நட்சத்திரம்' படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன். அதில் வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. மேலும் இப்படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. 


இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. 


இந்த நிலையில், 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாவது பாடலான 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' என்ற பாடல் ஆனது தற்போது வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement