பொன்னியின் செல்வனை அடுத்து நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக தங்கலான் படம் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் பிரமாண்டமாக இயக்குகிறார்.
விக்ரமுடன் இணைந்து இந்த படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அத்தோடு இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் ஒருமாதம் அவரை ஓய்வு எடுக்க சொல்லியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து நடைபெறும் தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமால் கலந்து கொண்டு நடிக்க முடியவில்லை. ஆதலால் சிறிது காலம் ஓய்வில் இருப்பார் எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து 'தங்கலான்' பட ரிலீஸ் மேலும் பின்னிற்கு போகவுள்ளதால் விக்ரம் ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
Listen News!