நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.
அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்துவருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் சூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு பூஜையும் போடப்பட்ட விக்ரமின் மஹாவீர் கர்ணா படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பூஜை கேரளாவின் பத்மநாப சாமி கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. வரலாற்றுப் படமாக திட்டமிடப்பட்டிருந்த மஹாவீர் கர்ணா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்தது. மலையாள இயக்குநர் ஆர்எஸ் விமல் இந்தப் படத்தை இயக்கவிருந்தார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவிருந்த இந்தப் படம் ஒருகட்டத்தில் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்தற்போது முழுவீச்சில் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ஆர்எஸ் விமல் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!