• Sep 20 2024

குடிநீர் போத்தல்களிலும் ஒட்டப்பட்ட விக்ரம் படத்தின் புகைப்படங்கள்- வித்தியாசமான ப்ரமோஷனாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தற்பொழுது விக்ரம் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் பாஃன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தற்போது பிரபல குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி பாட்டிலில் விக்ரம் படத்தின் புகைப்படங்கள் இடம்பெற்ற ஸ்டிக்கர்கள் இடம்பெற்றுள்ளன. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement