தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தின் வெளியீட்டுக்காக அனைத்து மொழி ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
மேலும் ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதோடு போனிகபூர் தயாரித்து வருகின்றார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் . விசாரணையில் பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளதால் இணையத்தில் வெளியானதால் பெரும் இழப்பு ஏற்படும் என்று வழக்கறிஞர் கூறினார் இதனால் சட்டவிரோத வெளியீட்டுக்கு தடை வேண்டும் என்று கூறினார் .
இதை ஏற்ற நீதிபதி சரவணன் படத்தை இணையத்தில் வெளியிட தடை விதித்தார். மேலும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்டோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டார் விசாரணை ஜூலை 1-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- சொந்த ஊரில் டீ கடை வைத்து பிழைப்பேன்…அதிரடி முடிவு எடுத்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா..!
- யாரும் அணிந்திடாத உடையில் பிறந்தநாள் கொண்டாடிய லக்ஷ்மி ராய்-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
- முதல் பத்திரிகை இந்த தொகுப்பாளருக்கு தானா… திருமணம் பற்றி பேசிய விக்னேஷ் சிவன்
- புதிய சர்ச்சையில் சிக்கிய விஷாலின் ‘லத்தி’ திரைப்படம்-குழப்பத்தில் ரசிகர்கள்
- டான் திரைப்படம் இதுவரையிலான முழு வசூல்- மொத்தம் இத்தனை கோடி வசூலா?
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!