ஆதித்ய வர்மா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் துருவ் விக்ரம்.மேலும் இவர் பிரபல முன்னணி நடிகரான விக்ரமின் மகன் என்பதை நாம் அறிவோம்.
ஆதித்ய வர்மா படத்தை தொடர்ந்து அடுத்ததாக மஹான் திரைப்படத்தில் தன்னுடைய தந்தையுடன் இணைந்து நடித்திருந்தார். இதன்பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருந்தார்.
ஆனால், மாமன்னன் உதயநிதியின் கடைசி படம் என்பதினால், அப்படத்தை முடித்துவிட்டு பின் துருவ் விக்ரம் படத்தை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறுஇருக்கையில், துருவ் விக்ரம் அடுத்ததாக பிரபல சென்சேஷன் இயக்குனர் கணேஷ் பாபுவுடன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணேஷ் பாபு சமீபத்தில் தான் டாடா எனும் சென்சேஷன் வெற்றிப்படத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகின்றது.
Listen News!