• Sep 20 2024

வீடு இல்லாமல் கஷ்டப்படும் கிராமம்... சிறுமி கூறியதைக்கேட்டுக் கண்கலங்கிய அரங்கம்.. சூப்பரான Super Singer ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது.


அந்தவகையில்  senior super singer-9 இடம்பெற்று முடிந்தமையைத் தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான 9-ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் Dedication Round இடம்பெறுகின்றது. இதில் சிறுமி ஒருவர் தனது பெரியப்பாவிற்காக டெடிகேட் செய்து பாடலினைப் பாடுகின்றார். 

அதற்காக அவர் கூறிய காரணம் அரங்கையே கண் கலங்க வைத்துள்ளது. அதாவது "எங்க வீட்டுக்குப் பக்கத்தில் நல்ல வீடு இல்லை, ரொம்பவே கஷடப்படுவாங்க, என் பெரியப்பா தான் அவங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அவங்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பாங்க" எனக் கூறியுள்ளார்.


மேலும் "என் பெரியப்பா பண்ணுறது எல்லாம் நானும் செய்யணும் என்று எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கு" என்கிறார். இதனையடுத்து நடுவர்கள் நீ இப்படி யோசிக்கிறதே பெரிய விஷயம் எனக்கு கூறி அவரைப் பாராட்டுகின்றனர்.


Advertisement

Advertisement