• Nov 10 2024

அடுத்தடுத்த படத்தில் வில்லன் கதாப்பாத்திரம்-ஒரே மாதத்தில் ரூ.80 கோடியா..தலைசுற்றிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் , சினிமாவை கலக்கி வரும் நடிகர் தான் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

ஹீரோவாக தனி படத்தில் இருந்தாலும் சரி, மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றாலும் சரி எதையும் பார்க்காமல் தனது கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து நடிப்பவர். இதன் காரணமாகவே அவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சமீப காலமாக இவர் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் போன்ற பிற மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றார்.குறிப்பாக விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்த பின்னர், நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லன் வாய்ப்புகள் அதிகளவில் குவிந்து வருகின்றன.

அத்தோடு விக்ரம் படம் ரிலீசான ஒரே மாதத்தில் அவர் 3 படங்களில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். மேலும் அதில் அவர் முதலாவதாக கமிட் ஆன படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகத்திலேயே வில்லனாக நடிக்க இருந்த விஜய் சேதுபதி கடைசி நேரத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினார்.

ஆனால் இந்த முறை இவருக்கென பலமான வில்லன் வேடம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் இயக்குநுர் சுகுமார். இதன்பின்னர் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் சேதுபதி. அத்தோடு தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிக்கவும் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார் மக்கள் செல்வன்.

மேலும் இந்த மூன்று பட வாய்ப்புகளும் கடந்த ஒரே மாதத்தில் கிடைத்துள்ளன. இதற்காக அவர் வாங்கிய சம்பள விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி ஜவான் படத்திற்காக ரூ.30 கோடியும், புஷ்பா 2 மற்றும் பாலகிருஷ்ணா படத்துக்காக தலா ரூ.25 கோடி என மொத்தம் ரூ.80 கோடி சம்பளமாக பெற ஒப்பந்தம் செய்துள்ளாராம் விஜய் சேதுபதி. இதன்மூலம் இவர் இந்திய சினிமா உலகின் காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்துள்ளார் விஜய்சேதுபதி

Advertisement

Advertisement