தமிழ்த் திரைப் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் விமல் ஆவர். விஜய் நடித்துள்ள கில்லி, குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடம் படத்திலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தின் மூலமாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.
இதனையடுத்து பல குறைந்த நிதிநிலை (budget) தயாரிப்பில் உருவாகும் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த இவர் நடிப்பில் தற்போது 'துடிக்கும் கரங்கள்' என்ற திரைப்படம் உருவாக்கி வருகின்றது.
இந்த திரைப்படத்தை இயக்குநர் வேலுதாஸ் என்பவர் இயக்குகின்றார். மேலும் விமலுடன் இணைந்து மிஷா நரங் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகின்றார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தினுடைய புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இப்படமானது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அப்போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!