• Nov 14 2024

வில்லனாக நடிப்பதை எண்ணி வருத்தப்பட்டு பேசிய வினய்- வாய்விட்டு சிரித்த சூர்யா- இது என்ன புதுசா இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குநர் ஜீவா இயக்கத்தில் வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் வினய்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், என்றென்றும் புன்னகை, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இருப்பினும் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புக் குறைந்ததால் நெக்கட்டிவ் ரோலில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக நடித்து அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் அருண் விஜய்யின் ஓ மை டாக் ஆகிய திரைப்படங்களிலும் வில்லனாக நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

வில்லன் ரோலுக்கு அவரது குரல் முக்கிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது.என்னதான் வில்லனாக ஜொலித்தாலும், நடிகராக தொடர்ந்து நடித்தாலும், ஹீரோவாக வந்த தான் இப்போது வில்லனாக நடிப்பதை நினைத்து வருந்துவாராம். எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, தனக்கு படப்பிடிப்பு இல்லாத ஒரு நாள் பாண்டிராஜ் ஷூட்டிங் செட்டுக்கு இவரை அழைத்துள்ளார்.

அப்போது பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தாராம் பாண்டிராஜ். அங்கு சென்றவர் படப்பிடிப்பை பார்த்துவிட்டு சூர்யாவிடம் ஒன்றை கூறியுள்ளார். ,"வில்லனாக நடிப்பதை எண்ணி நான் பல நாள் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் பாடல் காட்சிகளில் நடனமாடுவதை பார்த்தால், நீங்களே ஹீரோவாக இருந்து கொள்ளுங்கள். நான் வில்லனாக இருந்துகொள்கிறேன்" என்று தோன்றியதாகவும் கூறினாராம்.

அதைக் கேட்டு சூர்யா வாய்விட்டு சிரித்தாராம். ஜூன் போனால் ஜூலைக் காற்றே பாட்டில் கூட சதீஷ் ஆடிக் கொண்டிருக்க, வினய் நடக்க மட்டுமே செய்வார். சூர்யாவும் ஆரம்ப காலத்தில் நடனமாட முடியாமல் பின்னர் தன்னை வளர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement