சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
மேலும் இந்த சீரியலானது பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வருவதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்தவகையில் எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய கதாபாத்திரமான ஜனனி கதாபாத்திரத்தில் நடிகை மதுமிதா என்பவர் நடித்து வருகின்றார்.
இவருடைய அசத்தலான நடிப்பிற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிலையில் இன்றைய தினம் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது. இதனையடுத்து மதுமிதா விநாயகர் ஸ்பெஷலாக குட்டிக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த க்யூட்டான புகைப்படங்கள்..!
Listen News!