• Sep 21 2024

போலீஸ் ஸ்டேஷனில் ரகளையில் ஈடுபட்ட விநாயகன்- ஜாமீனில் விடுவிப்பு

stella / 10 months ago

Advertisement

Listen News!

மோகன்லால் நடித்த மாந்த்ரீகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் விநாயகன். 1995ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் திறமையை நிரூபித்த விநாயகனுக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கில் நடித்த விநாயகன் தமிழில் திமிரு படத்தின் மூலம் இண்ட்ரோ ஆனார். விஷால் நடித்த அந்தப் படத்தில் அவரது அண்ணியான ஸ்ரேயா ரெட்டிக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர சிறுத்தை, மரியான் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.


அண்மையில் வெளியாகிய ஜெயிலர் படத்தில் வர்மன் என்னும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அத்தோடு அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். இந்த நிலையில் நேற்று அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவரை போலீசார் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது குடி போதையில் இருந்த விநாயகன் போலீஸ் ஸ்டேஷனில் ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார். இதையடுத்து எர்ணாகுளம் டவுன் போலீசார் விநாயகனை கைது செய்தனர். நேற்று மாலை கைது செய்யப்பட்ட விநாயகன் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது.


நடிகர் விநாயகன் படத்தில் வர்மனாக குடிபோதையில் போலீசை மிரட்டியது போல் நிஜ வாழ்க்கையிலும் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை செய்து சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விநாயகனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement