வரும் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்த நிலையில் அந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. ஆனால் ஒரு தொகுதி மட்டுமே கொடுப்போம் என்று திமுக உறுதியாக கூறிய நிலையில், அந்த ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஒரு தொகுதி என்றாலும் ஓகே, ஆனால் எங்கள் கட்சியின் சொந்த சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கமல் தரப்பிடமிருந்து கோரிக்கை வந்தது. ஆனால் திமுக அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஒரு தொகுதி தான் அதிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியதை அடுத்து கமல் அடுத்த ஆப்ஷனாக மாநிலங்களவை தொகுதியை மட்டும் பெற்றுக் கொண்டார் என்பதும் இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ள நடிகை வினோதினி தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’கமல்ஹாசன் ஒரு ராஜ்யசபா சீட்டு என்ற ஒப்பந்தத்தை செய்திருக்கக் கூடாது என்றும் நாட்டின் நலனுக்காக பிரச்சார ஆதரவு என்பது சரிதான் என்றாலும் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று கூறியிருந்தால் அது நியாயமானது என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதால் அந்த கட்சிக்கு கிடைத்த 10 இடங்களில் ஒன்று எங்களுக்கு கொடுத்து இருக்கலாம் என்றும் இது அவர்களாகவே செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். எப்படி இருந்தாலும் எத்தனையோ சோதனைகளை நாம் தலைவர் சந்தித்திருக்கிறார், இது புதிதல்ல, இப்போதும் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு தான் ஆதரவு தருகிறோம், தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் வேலையை மய்யத்தின் தொண்டர்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் எடுத்த ஒரு மாநிலங்களவை தொகுதி என்ற ஒப்பந்தத்தை அவருடைய கட்சியில் உள்ள பலரே விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Listen News!