• Sep 20 2024

செல்லக் குழந்தையின் ஸ்னீக்கரை பகிர்ந்துகொண்ட பிரபல பெற்றோரான சோனம் மற்றும் ஆனந்தின் வைரலாகும் புகைப்படங்கள்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அஹுஜா பாலிவுட் சினிமாவில் பிரபல தம்பதிகளாக திகழ்கின்றனர். மேலும் பெற்றோராகி இருக்கும் இருவரும் தங்கள் வாழ்க்கையின் சிறப்புக் கட்டத்தை தற்போது தமது குழந்தையுடன் சேர்ந்து அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.


இருவரும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.அது மட்டுமல்லாது இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை இவர்கள் இருவரும் ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர். 


இன்று, சோனத்தின் கணவர் ஆனந்த் அஹுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் நான்கு ஜோடி ஸ்னீக்கர்களை வாங்கியிருப்பதைக் காணலாம். அதுமட்டுமல்லாது புகைப்படத்தில் இருக்கும் காலணியை ஒன்று தனது குழந்தைக்கு மற்றையது தனது மனைவிக்கும் இன்னொன்று தனக்கும் அன்று பகிர்ந்துள்ளார் . 

இந்தப் படத்தைப்  பகிர்ந்து அவர் பின்வருமாறு எழுதியுள்ளார் "மிக சமீபத்திய பிக்கப்கள்" என்று எழுதி, அதனுடன் ஒரு இதய ஈமோஜியையும் இணைத்துள்ளார்.அதுமட்டுமல்லாது சோனம் மற்றும் ஆனந்தின் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தமது நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருவதை காணலாம்

Advertisement

Advertisement