• Nov 17 2024

ஹாலிவுட் பட புரோமோஷனுக்கு வேஷ்டி - சட்டையில் வந்து மாஸ் காட்டிய தனுஷ்-வைரல் புகைப்படங்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது பன் மொழி நடிகராக உருவெடுத்து விட்டார். பாலிவுட் திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த பின்னர் ஹாலிவுட்டிலும் வெற்றி கொடி நாட்டினார்.

தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘தி இன்கிரிடிபில் ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படம் மூலம் அவருக்கு சிறந்த அறிமுகமான படமாக மட்டும் அமையாமல் சில விருதுகளையும் பெற்று தந்தது.மேலும் இதை தொடர்ந்து 'அவெஞ்சர்ஸ்' பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கி உள்ள, 'தி கிரே மேன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.

இப்படத்தில் நடிகர் தனுஷ் அவிக் சான் என்கிற மாஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தோடு அவருடன் கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், ஜூலியா பட்டர்ஸ், அனா டி அர்மாஸ் போன்ற ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் தி கிரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ரிலீசாக உள்ளது. எனவே இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடலில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் கலந்துகொண்டார் .அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதை தொடர்ந்து இன்று மும்பையில் நடந்த 'தி கிரே மேன்' படத்தின் ப்ரீமியர் ஷோவிலும் நடிகர் தனுஷ், படத்தின் இயக்குநர்களான ரூசோ பிரதர்ஸ் மற்றும் இந்த படத்தில் நடிக்க முக்கிய நடிகர் நடிகைகள் சிலர் பங்கேற்றுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் நடந்த போது, செம்ம கெத்தாக மகன்களுடன் கோட்டு - சூட்டில் மாஸ் காட்டிய தனுஷ், மும்பையில் தான் ஒரு தமிழன் என்பதை கெத்தாக நிரூபித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே கோட்டு - சூட்டு மற்றும் நடிகைகள் படு மாடர்ன் உடையில் வந்த போதிலும், தனுஷ் மிகவும் எளிமையாக கதர் வேஷ்டி சட்டையில் வந்து மிரள வைத்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement