தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா ஆவார். அதுமட்டுமல்லாது, அவரது கணவர் விக்னேஷ் சிவனும் பிரபல இயக்குனர் ஆவார். ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி பதித்த நடிகை நயன்தாரா பல்வேறுபட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக நயன்தாரா திகழ்கிறார்.
இவர் நடிக்கும் திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்த வெற்றி திரைப்படங்களாக விளங்குகின்றன. நானும் ரவுடிதான் எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை இவர் பலகாலம் காதலித்து வந்தார் இந்நிலையில் இந்த ஆண்டு இவர்கள் முடிச்சுப் போட்டுக் கொண்டனர். இந்நிலையில் தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வரும் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதிகள் அவ்வப்போதுசுற்றுலாவில் இருந்து முக்கியமான புகைப்படங்களையும் , தருணங்களையும் பகிர்ந்து கொள்வர்.
இவர்கள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களும், பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி விடுவது உண்டு அந்த வகையில் தற்போது இவரால் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் நயனும் விக்கியும் கைகோர்த்த வண்ணம் காணப்படுவதைக் காணலாம். இதற்கு ரசிகர்கள் பலர் தமது கருத்துக்களை நகைச்சுவையாக பதிவிட்டு வருவதனைக் காணலாம். அதுமட்டுமல்லாது நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகும் யவான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
Listen News!