அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட ரோபோ சங்கரை, மிகவும் பிரபலமாக்கியது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான்.
இவர் தன்னுடையை தனித்துவமான காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்துவார்.
விஜய் டிவியில் இவருடைய காமெடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானார்.தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்தார்.
ரோபோ சங்கர் சினிமாவைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். இவரைப் போலவே இவரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கரும் ஏதாவது பதிவுகளை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருவார். அந்தவகையில் இந்திரஜா சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ரோபோ சங்கர் தன்னுடைய வருங்கால மருமகனுடன் இணைந்து "திருப்பதி ஏழுமலை வெங்கடேசா" பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ...!
https://www.instagram.com/reel/CteRq8dhY_Z/?utm_source=ig_web_copy_link
Listen News!