• Sep 21 2024

வீரபாகுவின் அக்கா இவங்க தானா..? ஒருவழியாக கண்டுபிடிச்சாச்சு... 'எதிர்நீச்சல்' பிரபலங்களின் வைரல் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியல் நாளுக்கு நாள் அதிரடித் திருப்பங்களுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியவாறு நகர்ந்து கொண்டிருக்கின்றது. 


இந்த சீரியலில் தற்போது ஆதிரைக்கு கரிகாலனுடன் கட்டாயக் கல்யாணம் இடம்பெற்றுள்ளது. இந்த சீரியலில் நடிப்பவர்கள் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அவ்வப்போது அதில் ஏதாவது வீடியோக்களினைப் பதிவேற்றி வருவார். 


இந்த நிலையில் தற்போது ரேணுகா நந்தினி மற்றும் சக்தி என மூவரும் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் வீரபாகு காமெடி இடம் பெற்றுள்ளது. அதாவது அர்ஜுன் நடிப்பில் வெளியாகும் இந்த படத்தில் வீரபாண்டி தன்னுடைய அக்காவை விட்டுக் கொடுத்தது பற்றி பேசும் காமெடியை ரீல்ஸ் செய்ய இதில் வீரபாகுவின் அக்காவாக நந்தினி நடித்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் "ஒரு வழியா அந்த வீரபாகுவோட அக்காவை கண்டுபிடிச்சாச்சு" என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement