• Sep 20 2024

சிகிச்சைக்கு சென்ற இடத்தில் தமிழுக்காக உரையாற்றிய சிம்பு தந்தை- பிரபல நடிகர்களுடன் வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார் அவரது மகன் சிம்பு.

அதனைப்பற்றியும் தனது மகனை பற்றியும் பெருமையாக பேசி இருந்தார் நடிகர் டி.ராஜேந்தர்.அதற்காக சிம்பு தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துவிட்டு அமெரிக்கா சென்று அப்பாவை பார்த்துக்கொண்டிருக்கிறார்.இது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது டிஆரை அமெரிக்காவில் நடிகர் பாண்டியராஜன் மற்றும் நெப்போலியன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து பேசி நலம் விசாரித்துள்ளனர்.

அப்போது டிஆர் அமெரிக்க தமிழ் சங்கத்திற்கு வீடியோ வாயிலாக உரையாற்றி இருக்கிறார். உடல்நல குறைவு காரணமாக நேரில் வர முடியவில்லை என்றும், அதனால் தான் வீடியோவில் பேசுகிறேன் என டிஆர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவை நடிகர் பாண்டியராஜனின் மகன் வெளியிட்டு இருக்கிறார்.

இதோ வீடியோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement