கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளை சிறுவன் டேட்டிங் அழைத்தது குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 24 ஆவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்தப் போட்டி நிகழ்வின் போது ஒரு சிறுவன், ஹாய், விராட் மாமா, நான் வாமிகாவை டேட்டிங்கிற்கு அழைத்துச் செல்லலாமா? என்று எழுதிய சாட்டை கையில் பிடித்தப்படி போஸ் கொடுத்தார். சிறுவனின் இந்த சாட் போஸ் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலேயே இது தேவையா என கேட்டு விளாசி வந்தனர். அதுமட்டுமல்லாது விளம்பதிற்காக இதுபோன்ற மலிவான வேலைகளில் இறங்கி விட்டார்கள் என்றும் சாடி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தற்போது நடிகை கங்கனா ரனாவத்தும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதாவது அந்த சிறுவனின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கங்கனா ரனாவத், அவரது பெற்றோரை விளாசியுள்ளார். இப்பதிவில் "அப்பாவி குழந்தைகளுக்கு இந்த முட்டாள்தனத்தை கற்பிக்காதீர்கள், இது உங்களை அநாகரீகமாகவும் முட்டாள்தனமாகவும் காட்டுகிறது. இது மாடர்னாகவும் நல்லதாகவும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.
கங்கனா ரனாவத்தின் இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
मासूम बच्चों को ये बेहूदा बातें ना सीखायें, इससे आप मॉडर्न या कूल नहीं अश्लील और फूल लगते हो। https://t.co/dGC7OmOPvM
Listen News!