தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. இவர் 2007 இல் வெளியான 'பருத்தி வீரன்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். தனது அறிமுகத் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பின் மூலம் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதினை பெற்றுக்கொண்டார்.
இவர் பைலட் ஆக நடித்த 'காற்று வெள்ளியிடை' என்ற திரைப் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோன்று இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'விருமன்'. இப்படத்தினை இயக்குநர் முத்தையா இயக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்புக்கள் யாவும் முழுமையாக நிறைவுற்றுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் சங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இவருடன் இணைந்து ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தினை ஆகஸ்ட் 31-ஆம் திகதி வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கான இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றமை யாவரும் அறிந்த ஒரு விடயம் ஆகும்.
இந்த நிலையில் இப்படம் தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் கதைக்களம் மதுரையை மையமாகக் கொண்டதாக அமைந்துள்ளமையினாலேயே படக்குழுவினர் மதுரையை தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. கதைக்களமும் மதுரை, வெளியீட்டு விழாவும் மதுரை என்பதால் இந்த விடயம் கார்த்தி ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்துள்ளது.
பிற செய்திகள்
- சிம்புவிற்கு வலை விரிக்கின்றாரா அமலா பால்…குழம்பிப் போயுள்ள ரசிகர்கள்..!
- விஜய் சேதுபதியின் பள்ளிப் பருவக் காதல்…யார் அந்த ஜானு..?அவரே கூறிய உருக்கமான சம்பவம்…!
- “நானே ஷாக்கிங்ல தான் இருக்கேன்”…ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள பானுப்ரியாவின் சகோதரி…அவரே கூறிய சுவாரஷியமான தகவல்…!
- மைனா நந்தினியின் குறும்புத்தனமான நடனம்…அவரே வெளியிட்ட பதிவு..!
- 34 வயதிலும் வெறித்தனமாக ஜெனிலியா செய்து வரும் விஷயம்…வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!