தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனககென்று ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் கார்த்தி. பருத்தி வீரன் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார்.
இப்படம் மாஸ் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து படங்களில் படுபிஸியாக நடித்து வருகின்றார். இவர நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தான் விருமன். இந்தப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியிருந்தார்.
கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்திருந்தார். இது தான் இவருடைய முதல் படம் என்பதோடு இப்படத்தில் இவரது நடனம், குரல்வளம், நடிப்பு என்பன ரசிகர்களைக் கவர்ந்திருப்பதோடு ட்ரெண்டிங் நடிகையாகவும் வலம் வருகின்றார்.
மேலும் கிராமத்து கதையை மையமாக கொண்டு உருவாகிய விருமன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியது.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கலக்கி வருவதோடு திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் 3 நாள் முடிவில் படம் சென்னையில் மட்டுமே ரூ. 80 லட்சம் வசூலித்துள்ளதாம். இதனால் இவரது ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.
Listen News!