• Sep 20 2024

கிளாமர் குயினாக மாறிய விஷால் பட நடிகை... குவியும் லைக்ஸ்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மிருணாளினி ரவி. இவர் திறமை இருந்தால் எப்படியும் சினிமா துறையில் ஜெயித்து காட்ட முடியும் என்பதற்கு மிக பெரிய உதாரணமாக விளங்கி வருகின்றார். அதாவது டப்ஸ்மேஷ் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் ரீல் வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கின்றார்.



இவருக்கு இருக்கின்ற திறமையான நடிப்பும், அழகும் இவருக்கு ஏகப்பட்ட ஃபாலோவர்ஸை சோசியல் மீடியாவில் இவருக்கு உருவாக்கி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புக்களும் இவருக்கு அடுத்தடுத்து கிடைக்க தொடங்கின. ஆரம்பத்தில் பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்த வேலையை விட்டு விட்டு சினிமா துறையில் நடிக்க முடிவு செய்தார். 



அந்தவகையில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஒரு ஏலியனாக சிறு கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க தொடங்கின.

 


அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த 'சாம்பியன்' என்ற படத்தில் நடிகை மிருணாளினி ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் பொன்ராம் இயக்கத்தில் வெளியான 'எம்.ஜி.ஆர்.மகன்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகவும் நடித்தார். இந்த படங்கள் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக வெற்றி பெறாமல் போனமையினால் இவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின.



அதுமட்டுமல்லாது விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே மிருணாளினி நடித்திருந்தாலும்  'டம் டம்' என்ற பாடலும், அதில் இவர் போட்ட ஆட்டமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனால் தற்போது கண்டமேனிக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல் திரைப்படங்களை தேர்வு செய்து தனக்கேற்ற வகையில் நடிக்க தொடங்கியுள்ளார்.



இவர் படங்களில் வேறுப்பட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதை போன்றே சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ள நடிகை மிருணாளினி ரவி கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி விடும்.



அந்தவகையில் இவர் தற்போதும் கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டிருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் அப்புகைப்படங்களை அதிகளவில் ஷேர் செய்து வைரலாக்கியும் வருகின்றனர்.

Advertisement

Advertisement