• Sep 20 2024

செம மாடர்ன் ஹான்சம் லுக்கில் ரசிகர்களைக் கவரும் வகையில் நிற்கும் நடிகர் விஷால்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களைக கவர்ந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சண்டைக் கோழி, தாமிர பரணி, திமிரு, பூஜை ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருக்கின்றது. இருப்பினும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய வீரமே வாகை சூடும் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது ‘லத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இது குறித்த அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இவர் ஸ்டைலாக மாடர்ன் உடை அணிந்து லேட்டஸ்டாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விஷால் செம ஹான்சமாக இருக்கின்றாரே எனக் கூறி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement