• Sep 20 2024

சிம்புவோடு மோதத் தயாரான விஷால்- கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் லத்தி. இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக விஷால் நடித்துள்ளதோடு இயக்குநர் வினோத்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஷாலுக்கு மூன்று முறை காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விஷால் வலியில் துடித்த போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி செம டிரெண்டாகின.

முகம் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட, வாயில் பெரிய கயிறு ஒன்றை கடித்த படி, சிரித்துக் கொண்டிருக்கும் விஷாலின் போஸ்டர் படத்தின் மீதான ஆர்வத்தை துண்டி உள்ளதோடு நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷால் ஆக்ஷ்ன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

படத்தின் செகண்ட்ஆஃபில் 45 நிமிடங்கள் ஆக்ஷன் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம். இந்த அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாம். இந்த படத்திற்கு திலிப்கு சுப்பராயன் ஸ்டன்ட் அமைத்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இதற்காக ப்ரொமோஷன் உள்ளிட்ட வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட லத்தி படத்தை செப்டம்பர் 15 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்களாம்.அதாவது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாகும் அதே நாளில் விஷாலின் லத்தி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இதனால் எந்த படம் வசூலில் அள்ளிக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிக்களிடையே அதிகரித்துள்ளது எனலாம்.

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement