சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற விடயம் என்றால் அது விஷாலின் திருமணம் குறித்த செய்திகள் தான். அதாவது நடிகை லட்சுமி மேனனுடன், விஷால் டேட்டிங் செய்து வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தன.
அதாவது இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் லட்சுமி மேனனும், விஷாலும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகின்றது. இதுகுறித்த செய்திகளுக்கு இதுவரை காலமும் விஷால், லட்சுமி மேனன் இருவரும் பதிலளிக்காது இருந்த நிலையில், தற்போது விஷால் முதன் முறையாக இது தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் "பொதுவாக என்னைப் பற்றிய எந்தவொரு பொய்யான செய்திகள், மற்றும் வதந்திகளுக்கும் நான் ஒரு காலமும் பதிலளிப்பதில்லை. ஏனெனில் அது பயனற்றது என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்போது நடிகை லட்சுமி மேனனுடனான எனது திருமணம் பற்றிய வதந்தி பரவி வருவதால், நான் இதை மறுக்கிறேன். இது முற்றிலும் உண்மையற்ற ஒரு செய்தி.
என்னுடைய இந்தத் திடீர்ப் பதிலுக்கு காரணம், அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆக்கிரமித்து கெடுக்கிறீர்கள், அதுமட்டுமல்லாது அவரது இமேஜைக் கெடுக்கிறீர்கள். மேலும் ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதை நீங்களே டிகோட் செய்வது பெர்முடா முக்கோணம் அல்ல" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு "நம்பிக்கை உணர்வு மேலோங்கும். நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்தப் பதிவின் மூலம் விஷால், லட்சுமி மேனன் திருமணம் குறித்த செய்தி வெறும் வதந்தி என்பது தெளிவாகின்றது.
Usually I don’t respond to any fake news or rumors about me coz I feel it’s useless. But now since the rumour about my marriage with Laksmi Menon is doing the rounds, I point blankly deny this and it’s absolutely not true and baseless.
The reason behind my response is only…
Listen News!